Home

Welcome to The Rehoboth Mission Bible College

DISTANCE THEOIOGICAL EDUCATION

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாகுவதாக. TRMBC- தனியார்கிறிஸ்தவ இறையியல் கல்வி நிறுவனமாகும். TRMBC – தொலைதூரம் மற்றும் உள்ளூர் மாணவர்களை உள்ளடக்கியது. நமது, TRMBC –ல் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும், சபை பாகுபாடின்றி தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள், பள்ளி, கல்லூரிகளில் படிப்பவர்கள், வேலை செய்கிறவர்கள், பகுதிநேரம், முழுநேரம், கர்த்தருடைய ஊழியம் செய்கிறவர்கள், ஊழியம் செய்ய விரும்புகிறவர்கள், வேதாகமத்தை இறையியல் கல்லூரி சென்று முறையாக படிக்க நேரமும் வாய்ப்பும் இல்லாதவர்கள், அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை செய்கிறவர்கள், ஓய்வு பெற்றவர்கள், ஆண்கள், பெண்கள் என எல்லா வயதினரும், “THE REHOBOTH MISSION BIBLE COLLEGE” மூலமாக தங்களது வீட்டிலிருந்தப் படியே இறையியல் பட்டபடிப்பு படித்து, பட்டம் பெற்றுக் கொள்ளலாம். எளிய முறையில் படித்து பயன்பெறும் வகையில், பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. ஊழிய அனுபவ அடிப்படையில் கல்வி தகுதி தளர்த்தப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பட்டபடிப்பை, குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே படித்து முடிக்கும் வாய்ப்பு உண்டு. பாட புத்தகமும், தேர்வுத்தாளும் தபால் மூலம் அனுப்பி வருகிறோம்.

நமது TRMBC, இறையியல் மற்றும் ஊழிய நடைமுறையின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.


EXECUTIVE MEMBERS


நமது TRMBC –லாப நோக்கமற்ற இறையியல் கல்வி நிறுவனங்களின் ஒன்றாகும். நமது TRMBC – ஊழியர்கள் சிலர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அல்லாமல் நமது TRMBC – லும் இறையியல் கல்வி பயின்று பட்டம் பெற்று, பரிசுத்த ஆவியின் நிறைவோடும், வேத அறிவோடும், ஆவிக்குரிய அனுபவம் கொண்டவர்களாகவும், ஆத்தும ஆதாயம் செய்கிறவர்களாகவும், வேதாகம கல்வி ஆசிரியர்களாகவும், சபை மேய்ப்பர்களாகவும், மற்றவர்களை ஊக்குவிக்கும் தலைமைத்துவ பண்புகள் நிறைந்தவர்களாக ஆண்கள், பெண்கள் என தங்களை அர்ப்பணித்து TRMBC – ல், முதன்மை கல்வி அதிகாரிகளாகவும், பதிவாளாராகவும் இறைப்பணியாற்றி வருகிறார்கள்.