TRMBC – HISTORY

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மை தடவியாகிலும் கண்டுபிடிக்கதக்கதாக இந்த கடைசி நாட்களில் நமக்கு வெளிப்பட்டார். அவருடைய கட்டளையும், வாக்குத்தத்தமும். மத்தேயு 28:18-20 நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதாகுமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார். அவரின் கட்டளையை நாங்கள் நிறைவேற்றிட, இந்தியாவிலுள்ள, தமிழ்நாடு, கோவை மாவட்டம், காரமடை பகுதியை தலைமையமாகக் கொண்டு, சபை பாகுபாடின்றி, உலகத்தின் பல பகுதிகளிலிருந்து தபால் வழிமுறையிலும், நேரடி வகுப்பு முறையிலும் “THE REHOBOTH MISSION BIBLE COLLEGE” சுமார் 14 வருடங்களாக, ஆண்டவரின் கிருபையால் நடத்தி வருகிறோம்.


THE VISION & OUR MISSION

சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களுக்கு சென்று சுவிசேஷம் அறிவிப்பதும், சபைகள் இல்லாத இடத்தில், சபைகள் ஸ்தாபித்து போதகர்களை எற்படுத்துவதும், கிறிஸ்தவ விசுவாசமக்கள் முறையாக இறையியல் கல்வி கற்று, வேத அறிவுத்திறனை அபிவிருத்தி செய்துக்கொண்டு, ஆவிக்குரிய தலைவர்களாக உருவாகவேண்டும் என்பதே எங்களது தரிசனம்.


WHY CHOOSE TRMBC?

TRMBC – தனியார் கிறிஸ்தவ இறையியல் கல்வி நிறுவனமாகும். TRMBC – தொலைதூரம் மற்றும் உள்ளூர் மாணவர்களை உள்ளடக்கியது. TRMBC- ஒரு நிறுவனமாக, அதன் மாணவர்களின் வெற்றியை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது. மாணவர்கள் ஊக்கமளிக்கும் சூழலைக் காண்பார்கள். ஆவிக்குரிய வேத பாட உபகரணங்கள் மூலம், உலகலாவிய கிறிஸ்தவ ஊழியம் மற்றும் தலைமைப் பணியாளர்களை உருவாக்கவும், கிறிஸ்தவ நம்பிக்கை தொடர்பான காரியங்கள், நமது சமூகத்தின் கலாச்சாரம், கருத்தியல், மத பன்மை, திருச்சபையின் ஒற்றுமை, படைப்பின் ஒருமைப்பாடு, நம்பிக்கையின் ஒற்றுமை மற்றும் நம் வாழ்வின் அனைத்து பரிமாணங்களுக்கும் உணர்திறன் ஆகியவற்றுடன் தொடர்புடைய அனைத்து கிறிஸ்தவ சிந்தனைகளின் நீதி, சுதந்திரம், கண்ணியம் மற்றும் மனிதநேயத்திற்கு, தகுதியான வாழ்க்கைக்கான அனைத்து மக்களின் நியாயமான அபிலாஷைகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள மாணவர்களை ஊக்குவித்து வருகிறது.

மேலும் TRMBC – இந்தியாவிலுள்ள தமிழ்நாடு, கோவை மாவட்டம், காரமடை மற்றும் பிற பகுதியிலும், BIBLE STUDY CENTER மூலம், ஆவிக்குரிய அனுபவமும், போதிக்கும் திறமை கொண்ட வேதபண்டிதர்களாலும், மாதம் ஒருநாள் தமிழிலும், ஆங்கிலத்திலும் குறைந்த கட்டணத்தில், சர்வலோகத்தின் தேவனை அறிந்துக்கொள்ளும் பயணத்தில் எவரும் பேரின்பம் அடையும்படி, வேதத்தின் ஆழமான சத்தியங்களை எளிய நடைமுறைக்கேற்ப, B.Th., B. D., M. Th., M. Div., பாடங்களை நடத்தி வருகிறது. இதில், அநேக திருச்சபை மூப்பர்களும், ஊழியர்களும், சபை பாகுபாடின்றி விசுவாசிகளும், சீஷத்துவப் பயிற்சியும், இறையியல் கல்வியும் கற்று, வேத அறிவுத்திறனை அபிவிருத்தி செய்து கொண்டு, பயிற்சி முடிவில் தகுதி சான்றிதழும், மதிப்பெண் சான்றிதலும் பட்டமளிப்பு விழாவில் பெற்று வருகிறார்கள். ,


STATEMENT OF FAITH

பரிசுத்த வேதாகமம் தேவனுடைய ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்டுள்ளது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற திரியேகதேவனின் நித்திய பிரசன்னத்தையும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தையும், அவரது கன்னிப்பிறப்பையும், பாவமில்லா வாழ்க்கையும், அவர் செய்த அற்புதங்களையும், நமது பாவங்களுக்கு பரிகாரமான அவரது தியாக மரணத்தையும், அவரது சரீர உயிர்த்தெழுதலையும், அவர் பரலோகத்திற்கு எழுந்தருளி பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், மீண்டும் வல்லமையோடும் மகிமையோடும் பூமிக்கு திரும்பி வரப்போகிறார் என்பதையும், அவரது ஆயிர வருட அரசாட்சியையும், இயேசு கிறிஸ்து வரும்போது அவரது சபை எடுத்துக் கொள்ளப்படும் என்ற மகிமையான நம்பிக்கையும், இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதன் மூலம், அவரது பரிசுத்த இரத்தம் நமது பாவங்களை சுத்திகரிக்கிறது என்பதையும், தனிப்பட்ட இரட்சிப்பிற்கு பரிசுத்த ஆவியால் மீண்டும் பிறப்பது, தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் எடுப்பது, கல்வாரி சிலுவையின் மூலம் தெய்வீகசுகத்தை பெற்றுக்கொள்வது, என்பதையும் விசுவாசிக்கிறோம்.